நான் தற்கொலை செய்யாமல் தடுத்த நண்பன், தற்கொலை செய்து கொண்டான்; ஜி.பி.முத்து உருக்கம்

0
433

தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்திற்கு அருகேயுள்ள வெங்கடாசலபுரம் என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் தான் ஜி.பி.முத்து.இவர் டிக்டாக் செயலி மூலம் பிரபலமடைந்தவர்.

இதைத்தொடர்ந்து பிறகு முகநூல், யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகளில் காணொளி பதிவேற்றி வருகிறார்.

ஜி.பி முத்துவுக்கு ரசிகர்கள் பலர் கடிதங்களையும் பரிசு பொருட்களையும் அனுப்பி வருவதையும், அவர் அதை பிரிக்கும் பொழுது எடுக்கும் காணொளிகளும் மிகவும் பிரபலமாகி வருவதும் உண்டு.

இது தவிர ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் பிக்பாஸ் சீசன் 6 இலும் போட்டியாளராக பங்கேற்றார்.

இருந்தாலும் தனிப்பட்ட காரணத்திற்காக பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து சில நாட்களிலேயே வெளியேறினார்.

தற்கொலைக்கு முயற்சித்த பிக்பாஸ் போட்டியாளர்: தடுத்த நிறுத்திய நபருக்கு நேர்ந்த சோகம்! | Gp Muthu Attempted Suicide His Friend Stopped Died

இந்த நிலையில் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் குடும்ப வறுமை காரணமாக தற்கொலை செய்ய முயற்சி செய்ததாகவும் அப்போது தடுத்த நண்பன் தற்பொழுது தற்கொலை செய்து கொண்டதாகவும் உருக்கமாக பேசினார்.

தற்கொலைக்கு முயற்சித்த பிக்பாஸ் போட்டியாளர்: தடுத்த நிறுத்திய நபருக்கு நேர்ந்த சோகம்! | Gp Muthu Attempted Suicide His Friend Stopped Died

இவரின் இந்தப் பேச்சைக் கேட்டு ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.