வங்குரோத்து நாட்டை உருவாக்கியவர்கள் உபதேசம்: சபையில் எதிர்க்கட்சி விசனம்

0
145

வங்குரோத்து நாட்டை உருவாக்கியவர்களே இன்று எமக்கு உபதேசம் செய்கின்றனர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விசனம் வௌியிட்டுள்ளார். நாடாளுமன்றில் இன்று வியாழக்கிழமை (25.07) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“பணக்காரனுக்கு வரிச்சலுகை கொடுத்து நாட்டையே நாசமாக்கியவர்கள் இவர்கள். நாம் செய்த பாவம் திருடர்களுடன் சேர்ந்து நாட்டையே திவாலாக்கி விட்டதே. அந்த பாவத்திற்கு பங்களிக்கவில்லை என்பது குறித்து மகிழ்ச்சியடைகிறேன்” என்றார்.

அவர்களின் தீர்மானங்களினால் நாடு ஜனநாயக வரலாற்றில் முதல் தடவையாக வங்குரோத்து நிலைக்குச் சென்றதாகவும் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.