நாளை முதல் அனைத்து பாடசாலைகளுக்கும் முதலாம் தவணை விடுமுறை ஆரம்பம்

0
178

2023ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் அரச அனுசரணையுடன் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் முதலாம் கட்ட விடுமுறை நாளை (22) வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதன்படி, மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் 2024ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கப்படும் என அமைச்சு தெரிவிக்கிறது.

புதிய ஆண்டின் புதிய கல்வி தவணை நடவடிக்கைகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 19ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.