பாரம்பரியமாகவே தமிழர்களின் வீர விளையாட்டாக இருக்கும் ஜல்லிக்கிட்டு, பொங்கல் தினத்தையொட்டி நடைபெறும். அந்த வகையில் தமிழகத்தில் முதல் ஜல்லிக்கட்டு மற்றும் அதிக ஜல்லிக்கட்டு நடைபெறும் இடமாக புதுக்கோட்டை மாவட்டம் திகழ்கிறது.
அதன்படி இந்த ஆண்டுக்கான தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தச்சங்குறிச்சியில் இன்று முதல் ஆரம்பமாகியுள்ளது. இப்போட்டிக்காக பல மாவட்டங்களிலிருந்து 600 காளைகளும் 320 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.