சுற்றுலா பயணியை ஏமாற்றிய உணவக உரிமையாளருக்கு நேர்ந்த கதி!

0
107

இலங்கைக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டு பயணியிடம் ஒரு உளுந்து வடை மற்றும் தேனீருக்கு 800 ரூபாய் அறவிட்ட குற்றச்சாட்டில் நபரொருவரை களுத்துறை சுற்றுலா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலும், குறித்த உணவகத்தின் உரிமையாளர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தினார்.

களுத்துறையில் வெளிநாட்டவர் ஒருவரை முதன்மையாக சுரண்டிய உணவகத்தின் உரிமையாளரின் நடத்தையை, அந்த வெளிநாட்டவர் டிக் டோக் வீடியோ மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.

இதனையடுத்தே குறித்த நபர் களுத்துறை சுற்றுலா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.