ரணகளமான நியூயார்க் மிஸ் இலங்கை அழகுப் போட்டி!

0
3807

அமெரிக்காவின் நியூயார்க் நகரின் முதல் மிஸ் இலங்கை அழகுப் போட்டி நடைபெற்றது. இலங்கை மக்கள் அதிகம் வசிக்கும் சவுத் பீச்சில் உள்ள வாண்டர்பில்ட்டில் இது நடைபெற்றது.

இலங்கையின் பொருளாதார பின்னடைவை தொடர்ந்து இலங்கை மருத்துவமனை ஒன்றுக்கு பணம் திரட்டும் முயற்சியில் ஈடுபட்ட ஸ்டேட்டன் ஐலண்ட் போட்டிக்கு 300க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் வந்திருந்தனர்.

இந்த போட்டியில் நியூயார்க் மிஸ் இலங்கையாக ஏஞ்சலியா குணசேகர தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் நிகழ்ச்சிக்கு பிறகு நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியின் போது இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது.

இதன்போது ஒருவருக்கொருவர் தாக்கி கொண்ட வீடியோ ஒன்று தற்போது வைரலாகி உள்ளது.