ஜனாதிபதி அனுரவை சந்தித்த விமானப் பணிப்பெண்ணின் நெகிழ்ச்சியான அனுபவம்

0
33

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை விமானத்தில் சந்தித்த விமானப் பணிப்பெண் தனது அனுபவத்தை இவ்வாறு பகிர்ந்துள்ளார்.

“என் தாய் நாடான இலங்கைக்குச் செல்லும் வழியில் நமது ஜனாதிபதியைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. நான் தோஹாவிலிருந்து கொழும்புக்கு செல்லும் விமானத்தில் பணி செய்து கொண்டிருந்தேன்.

நானும் எனது நண்பர் இமாரத்தும் அவருடன் புகைப்படம் எடுக்கச் சென்றோம். ஆனால் அவர் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தார், அதனால் நாங்கள் அவரைத் தொந்தரவு செய்யவில்லை.

சிறிது நேரம் கழித்து அவர் விழித்தெழுந்து குளியலறைக்கு புத்துணர்ச்சி பெறச் சென்றார். அதனால் நாங்கள் வெளியே காத்திருந்தோம்.

அவர் எங்களுடன் புகைப்படம் எடுக்க அனுமதி தந்தார். மேலும் அவர் நின்றுகொண்டே எங்களுடன் 15 நிமிடங்களுக்கும் மேலாகப் பேசினார்.

அவர் மிகவும் அன்பானவர் நாங்கள் ஜனாதிபதியுடன் பேசுகிறோம் என்பதைக் கூட மறந்துவிட்டோம். சில நிமிடங்கள் கழித்து எங்கள் மேற்பார்வையாளர் நாங்கள் அவரைத் தொந்தரவு செய்கிறோமா என்று பார்க்க வந்தார். ஆனால் ஜனாதிபதி சிரித்துக்கொண்டே “இல்லை பரவாயில்லை இவர்கள் என் மக்கள்” என்றார். 

அந்த நேரத்தில் நான் மிகவும் பெருமையாக உணர்ந்தேன். நான் பணிபுரியும் அதே விமானத்தில் இருந்த நமது நாட்டின் ஜனாதிபதியைச் சந்தித்துப் பேசுவது ஒரு உண்மையான பாக்கியம் என அவரது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.