இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்திய நில அதிர்வு..!

0
271

இலங்கையில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நில அதிர்வு கொழும்பில் இன்று(01.07.2023) மதியம் உணரப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த ஆழ்கடல் அதிர்வு, இலங்கையின் தென்கிழக்கு கடற்கரையிலிருந்து 1200 கிலோமீற்றர் தொலைவில் ஏற்பட்டதாக கூறப்படுகின்றது. 

நில அதிர்வு

கொழும்பு, பத்தரமுல்ல, அக்குரஸ்ஸ மற்றும் காலி போன்ற பகுதிகளில் இந்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

கொழும்பு உள்ளிட்ட சில பகுதிகளில் இந்த நில அதிர்வு ஏற்பட்டதை மக்கள் உணர்ந்ததாக தகவல் வெளியாகியமையால் குறித்த நேரத்தில் பரபரப்பான சூழ்நிலை உருவானமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இருப்பினும் குறித்த நில அதிர்வால் இலங்கைக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.