இன்ஸ்டாகிராம் பதிவு மூலம் கணவனை விவாகரத்து செய்த துபாய் இளவரசி!

0
112

ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை அதிபரும், பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான முகமது பின் ரஷித் அல் மக்தூமின் மகளான ஹைகா மஹ்ரா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில் “அன்புள்ள கணவருக்கு நீங்கள் வேறு சிலருடன் உறவில் இருப்பதால் உங்களை நான் விவாகரத்து செய்வதை இதன் மூலம் அறிவிக்கிறேன்.

நான் உங்களை விவாகரத்து செய்கிறேன், நான் உங்களை விவாகரத்து செய்கிறேன், நான் உங்களை விவாகரத்து செய்கிறேன். உடல் நலனை பார்த்துக்கொள்ளுங்கள் இப்படிக்கு உங்கள் முன்னாள் மனைவி.” என்று தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் மஹ்ரா கணவரை விவாகரத்து செய்திருப்பது குறித்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மஹ்ராவின் இந்த அறிவிப்பை அடுத்து பலரும் பல்வேறு கருத்துக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர்.