தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். இவர் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் “லியோ” படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் விஜய்யுடன் “வாரிசு” படத்தில் இணைந்து நடித்த நடிகை அர்ச்சனா உன்னிகிருஷ்ணன் விஜய்யை பற்றி சில தகவல்கள் அண்மையில் பகிர்ந்துள்ளார்.
“வாரிசு” படத்தின் முதல் நாள் படப்பிடிப்பில் விஜய் எதுவும் பேசவில்லை. அடுத்த நாள் முதல் சாதாரணமாக பேச தொடங்கினார். அவ்வாறு பேச தொடங்கிய போது தனது மகன் சஞ்சய் பற்றியும் பேசினார்.
அவர் சஞ்சயை நடிகனாக தான் பார்க்க ஆசைபட்டார். ஆனால் சஞ்சய் திரைப்பட இயக்கம் மீது தான் ஆர்வமாக இருக்கிறான் என வருத்தத்துடன் தெரிவித்ததாக நடிகை அர்ச்சனா கூறியுள்ளார்.