விடுதலைப் புலிகள் வெள்ளைக் கொடியுடன் சரணடைதல் தொடர்பில் இலங்கை அரசுடன் வெளிநாட்டு முகவர்கள், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் உறுப்பினர்) மூலமாக விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப்ப் பொறுப்பாளர் பா. நடேசன், சமாதான செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் ஆகியோர் உட்பட பல போராளிகள், தலைவர்கள் சரணடைதல் தொடர்பிலும் விடுதலைப் புலிகளின் இறுதிநேர இறுக்கமான நிலை தொடர்பில் இருவர் பேசிக்கொண்டிருந்தனர்.
ஒருவர் ரொஷான் மற்றவர் கஜேந்திரகுமார் இவர்களில் த.தே.ம.மு நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் முன்வைத்த குற்றச் சாட்டுக்கள் சமூக வலைத்தளங்களில் தற்போது மீண்டும் வைரலாகி வருகிறது.
அவை தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
மே 16 2009 இல் நள்ளிரவு வேளையில் நடேசன் அவர்கள் “நான் அவசரமாக கஜேந்திரனுடன் கதைக்க வேண்டும் அவருடைய இலக்கத்தை தாருங்கள் என ரொஷானிடம் கேட்டுள்ளார்.
மறுமொழியாக ரொஷான் “உங்களிடம் தானே அவருடைய இலக்கம் இருக்கின்றதே என கூறினார். அதற்கு நடேசன் அவைகள் இயங்குநிலையில் இல்லை புதிய இலக்கம் தரமுடியுமா எனக்கேட்டுள்ளார்.
அதற்கு ரொஷான் புதிய இலக்கத்தையும் நாடாளுமன்ற உருப்பினர்களுக்காக கொழும்பிலுல்ல விடுதி இலக்கத்தையும் கொடுத்துள்ளார்.
ஒரு சில நிமிடங்களில் மீண்டும் ரொஷானை தொடர்பு கொண்டு நீங்கள் தந்த கையடக்க தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்தேன் என்னை நான் நடேசன் என உறுதிப்படுத்திய வேளை தொலைபேசி அழைப்பு துண்டிக்கப்பட்டது.
விடுதியின் இலக்கமும் செயற்பாட்டிலில்லை என கூறியதுடன் இவர்களா எமது போராட்டத்தை சர்வதேசத்துக்கு முன்னகர்த்துவார்கள் என ஆத்திரதுடன் முறையிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு ரொஷான் தெரிவித்திருந்தார்.
இப்படியாக பல்வேறுபட்ட விடுதலைப் புலிகளின் பரம இரகசியங்களை இலங்கை அரசுக்கும் புலனாய்வுத்துறையினருக்கும் தொடர்ந்து வழங்குவதில் முன்னோடியாக இருந்த கஜன், இலங்கை அரசின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபயவுடன் மறைவில் நல்லுறவில் இருந்துள்ளார் என்பதும் மறைக்கமுடியாத உண்மையே.
விடுதலைப் புலிகளின் சரணடைதலை நன்கறிந்திருந்த கஜேந்திரகுமார் அதற்கு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையே நடேசன் இறுதியாக ரொஷானிடமும் கூரியுள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
காரணம், அடிப்படையில் விடுதலைப் புலிகள் அமைப்பை கஜேந்திரகுமார் குடும்பத்திற்கு அறவே பிடிக்காது. ஏனெனில் இவர்களின் குடும்பதிற்கோ இவருக்கோ தமிழர்களின் வலியோ வேதனையோ தெரியாது சரணடைதலை இன்று பலமாக கூக்குரலிடும் கஜேந்திரகுமார் ஏன் அன்று இந்த துரோகம் செய்தார்? அது மட்டுமா நேரடிச் சாட்சியமான கஜேந்திரகுமார் ஏன் இன்று வரை ஐ.நாவில் நேரடிச் சாட்சியாக மாறவில்லை என்கிற சந்தேசம் பலரிடம் உள்ளது.
நடேசன் எது தொடர்பில் கஜேந்திர குமாருடன் கதைக்க எத்தணித்தார் என்பது தனக்கு தெரியாது என்கிறார் ரொஷான். இப்படியாக விடுதலைப் புலிகளின் அழிவிற்கும் கஜேந்திரகுமார் பிரதான மறைமுக காரணியாவார் என்பதை வரலாறிலிருந்து அழிக்கவே முடியாது.
இன்று புலி… புலி.. என கூக்குரலிடும் இவரால் ஏன் அன்று 2009இல் நாடாளுமன்ற ஆசனத்தை துறக்கவில்லை. இவ்வளவு இறுக்கமான கட்டத்தில் போராட்டம் நடாத்திய கஜேந்திரகுமாரை ஒருமுறையாவது இலங்கை புலனாய்வுத்துறை விசாரணை செய்ததா – இல்லை? ஏன் . இவருடைய அரச உயர்மட்ட தொடர்புகளே முக்கிய காரணம்.
இப்படியாக வெளிநாட்டு புலிகளிடம் பணத்தைக் கறக்கும் இவர் இலங்கையின் பசில் ராஜபக்ஷவிடமும் பல சூட்கேசுகளை வாங்கியிருந்தார் என்பதும் அம்பலம்.
இந்திரசபையில் அந்த இந்திரன் எவ்வளவு நரிக்குணம் கொண்டவனோ அது போலவே இந்த கஜேந்திரகுமாரும் தமிழர்களின் வாழ்வில் ஒரு நரி என்பதில் சிறிதேனும் ஐயமில்லை. வெள்ளைக்கொடிக்கே துரோகம் செய்த இவரால் தமிழரின் தீர்வு சாத்தியமா அசாத்தியமா என மக்கள் வினா எழுப்புகின்றனர்.



