கம்பஹாவில் பட்டபகலில் நடந்த பயங்கரம்; இளம் யுவதி வெட்டிப் படுகொலை!

0
202
The dead woman's body. Focus on hand

கம்பஹா – அத்தனகல்லை பிரதேசத்தில் இளம் யுவதி ஒருவர் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்றைய தினம் (05-07-2023) முற்பகல் 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

தென்னிலங்கையில் பட்டபகலில் நடந்த பயங்கர சம்பவம்: இளம் யுவதிக்கு நேர்ந்த கொடூரம்! | Suspects Broke House Killed Young Woman In Gampaha

இந்த கொலை சம்பவத்தில் 21 வயதுடைய எஸ்.ஜே.ரோஹிணி என்ற பெண்ணே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த யுவதி வீட்டில் தந்தை, தாய் ஆகியோருடன் இருந்த வேளை மோட்டார் சைக்கிளில் வந்து இறங்கிய இருவர் வீட்டுக்குள் புகுந்து கூரிய ஆயுதத்தால் யுவதியைச் சராமரியாக தாக்கி விட்டு தப்பியோடியுள்ளனர்.

தென்னிலங்கையில் பட்டபகலில் நடந்த பயங்கர சம்பவம்: இளம் யுவதிக்கு நேர்ந்த கொடூரம்! | Suspects Broke House Killed Young Woman In Gampaha

கொலையாளிகள் முகத்தை மூடிய தலைக்கவசத்தை அணிந்தவாறு வந்து இந்த வெறியாட்டத்தைப் புரிந்துள்ளனர்.

சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார், யுவதியின் சடலத்தை மீட்டு வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைத்துள்ளனர்.

காதல் விவகாரமே கொலைக்குக் காரணம் என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தென்னிலங்கையில் பட்டபகலில் நடந்த பயங்கர சம்பவம்: இளம் யுவதிக்கு நேர்ந்த கொடூரம்! | Suspects Broke House Killed Young Woman In Gampaha

உயிரிழந்த யுவதி அத்தனகல்லை பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரைக் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.

தனது பெற்றோரின் எதிர்ப்பையடுத்துக் கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் காதலுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு உறவினர் ஒருவரைத் திருமணம் செய்யச் சம்மதம் தெரிவித்திருந்தார் என்றும் பொலிஸாரின் மேலதிக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், யுவதியின் முன்னாள் காதலன் கூலிக்கு ஆட்களை அமர்த்தி இந்தப் படுகொலையைச் செய்திருக்கக்கூடும் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

உயிரிழந்த யுவதியின் முன்னாள் காதலனையும், கொலையாளிகள் இருவரையும் பொலிஸார் தேடி வருகின்றனர்.