தமிழர்களின் அழுத்தம் காரணமாக முடிவை மாற்றிய கிரிக்கெட் நிறுவனம்

0
207

தமிழ் மொழியை புறக்கணித்த ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் தமது முடிவை மாற்றி தமிழிலும் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ், சிங்கள புத்தாண்டு தினமான நேற்று, சிங்கள மற்றும் ஆங்கிலம் மொழிகளில் மட்டுமே வாழ்த்து தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து தமிழர் தரப்பினால் கடும் கண்டனம் வெளியிடப்பட்டுள்ள நிலையில், தமிழ் மொழியும் இணைந்த வாழ்த்தினை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

தமிழர்களின் கடும் அழுத்தம் காரணமாக முடிவை மாற்றிய அரச நிறுவனம் | Sinhala Tamil New Year 2023 Tamil Wishes

முதலாம் இணைப்பு

அண்மைக்காலமாக தமிழையும் தமிழர்களின் அடையாளம் சிதைக்கும் வகையில் இலங்கை அரச இயந்திரம் செயற்பட்டு வருகிறது.

இலங்கையின் தேசிய மொழிகளில் ஒன்றாக தமிழ் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. எனினும் பல அரச காரியங்களின் போது தமிழ் நிராகரிக்கப்பட்டு வருகிறது.

இலங்கையின் தேசிய சுதந்திர தினம் முதல் பல இடங்களில் தமிழ் முற்றாக நிராகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இலங்கை முழுவதும் தமிழ், சிங்கள புத்தாண்டை மக்கள் கொண்டாடி வருகின்றனர்.