நாடு இயல்பு நிலைக்குத் திரும்பும் – அமைச்சர் ஹரின்

0
597

இலங்கைக்கு எதிர்வரும் ஜூலை 10ஆம் திகதிக்குப் பின்னர் எரிபொருள் மற்றும் எரிவாயு கிடைக்கும் எனவும் அதன் பின்பு நாடு இயல்பு நிலைக்குத் திரும்பும் எனவும் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ (Harin Fernando) நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

நேற்று இரவு (27-06-2022) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

நாட்டின் இயல்பு நிலை தொடர்பில் அமைச்சர் ஹரின் வெளியிட்ட முக்கிய தகவல்! | Minister Harin Hope Normalcy Of The Sri Lanka

மேலும், இது நாட்டை முடக்கும் நிலை அல்ல எனவும் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்த காலகட்டத்தில் மக்களின் ஆதரவு தேவை எனவும் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

இத்தோடு நகரபுற பாடசாலைகள் எதிர்வரும் ஜூலை மாதம் 10 ஆம் திகதிக்குப் பின்னரே திறக்கப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன (Bandula Gunawardane) தெரிவித்துள்ளார்.