வரவு செலவு திட்ட முன்மொழிவால் நாடு மேலும் நெருக்கடியை சந்திக்கும்; NPP குற்றச்சாட்டு

0
152

2024 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்ட முன்மொழிவானது கடனைப் பெறுதல் மற்றும் அரச சொத்துக்களை விற்பனை செய்தல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது என தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

2024 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்ட முன்மொழிவு நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலே தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அத்துடன் 2024 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்ட முன்மொழிவு மூலம் நாட்டை மேலும் நெருக்கடிக்குள் தள்ளுவதை அரசாங்கம் தொடர்ந்தும் மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஆரம்பத்தில் முன்மொழியப்பட்ட தொகையை விட மேலும் 3400 பில்லியன் ரூபாவினால் கடன் பெற்றுக் கொள்ளும் வரம்பை அரசாங்கம் அதிகரித்துள்ளதாக அனுரகுமார சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் நிலவும் நெருக்கடிக்கு புதிய தீர்வுகளை வழங்குவதற்கு பதிலாக ஜனாதிபதி மற்றும் அவரது அரசாங்கம் தமது பழைய மற்றும் தோல்வியுற்ற நடவடிக்கைகளை மீண்டும் முன்மொழிந்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.