இந்துமா சமுத்திரத்தில் வல்லரசுகளுக்கிடையிலான போட்டித்தன்மை தீவிரமடைந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தில் பக்க சார்பின்றி வல்லரசுகளுக்கிடையிலான போட்டியிலிருந்து இலங்கையை விலக்கி வைத்திருக்க தான் முயற்சிப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
எனவே வல்லரசுகளுக்கிடையிலான இப்போட்டி நிலைமை எதிர்காலத்தில் எவ்வாறான பிரச்சினையை ஏற்படுத்தும் என ஊகிக்க முடியாது என்பதனால் , அனைத்திற்கும் தயாராகும் வகையில் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காக பலம்மிக்க முப்படையை உருவாக்குவதற்காக ‘பாதுகாப்பு 2030’ செயற்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

வல்லரசுகளுக்கிடையிலான போட்டி

மேலும் வல்லரசுகளுக்கிடையிலான போட்டி தன்மை பசுபிக் சமுத்திரத்திலிருந்து குறைந்து தற்போது இந்து சமுத்திரத்திலும் தாக்கம் செலுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
எனவே எதிர்காலத்தில் எமது படைகளை வெளிநாடுகளுக்கு அனுப்ப வேண்டிய நிலைமை ஏற்படலாம் எனவும் இதனைக் கருத்திற் கொண்டு ‘பாதுகாப்பு 2023’ என்ற செயற்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும், அதன் மூலம் பலம் மிக்க முப்படை உருவாக்கப்படும் எனவும் ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.
