இலங்கை நாடாளுமன்றில் 2025 ஆம் ஆண்டுக்காண வரவு செலவுதிட்டம் ஜனாதிபதி அனுரகுமாரவால் முன்வைக்கப்பட்டு முதல் வாசிப்பு வெற்றி பெற்றுள்ளது.
இம்முறை முன்வைக்கப்பட்ட வரவு செலவுதிட்டத்தில் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. அதில் முல்லைத்தீவு வட்டுவாகல் பாலம் உட்பட யாழ் நூலகம் மற்றும் வீவிவாதங்களும் எழுந்துள்ளன. அந்தவகையில் முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்திற்கு ஆயிரம் மில்லியன் என்றவுடன் வாயப்பிளக்கும் சிலருக்கு தெரியாது.
சிங்கள பௌத்த பேரினவாதத்தின் நுண்ணரசியல் அதையும் தாண்டி முல்லைத்தீவு மாவட்டத்தினை எறிகணைகளாலும் குண்டுவீச்சு விமானங்களாலும் கருக்கிய சிங்கள பௌத்த பேரினவாதம் குறிப்பாக தேசிய மக்கள் சக்தி அள்ளித்தெளிக்கிறதாக சமூகவலைத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
அதோடு தனது உள்ளூராட்சி அரசியலுக்காக ஆனால் மற்றைய மாவட்டங்களின் அபிவிருத்திக்கு ஒதுக்கிய நிதியின் அரைவாசி கூட வடகிழக்கு மாவட்டங்களுக்கில்
அதுமட்டுமன்றி வட்டுவாகல் பாலம் என்கின்ற தமிழர் தாயகத்தின் முக்கிய மான ஒரு பாலத்தின் அபிவிருத்திக்கு பாரிய நிதி ஒதுக்கியுள்ளதாக காட்டி தமிழர் பகுதிகளில் அபிவிருத்தி செய்வதாக காட்டி ஆசிய அபிவிருத்தி வங்கி, சர்வதேச நாணயநிதியம் போன்ற நிதி நிறுவனங்களிடமிருந்து பெருந்தொகைப்பணத்தை கடனாக வாங்கப்போகின்றது அநுர அரசாங்கம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு வாங்கின்ற கடன் கூட எம் ஒவ்வொருவர் தலையிலே தான் விழப்போகின்றது. இதனை அறிந்தும் தமிழ் மக்கள் பிரதிநிதிகள் பலர் வரவு செலவுத்திட்ட வாக்கெடுப்பில் ஓடி ஒழித்துக்கொண்டார்கள்.
பாராளுமன்ற உறுப்பினர் அடைக்கலநாதன் போன்றோர் ஆதரவாகவும் வாக்களித்தார்கள் என்பது இனத்தின் சாபக்கேடு எனவும் சமூகவலைத்தளங்களில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.