கோட்டாபய ஆட்சியில் ஏற்பட்ட மாற்றம் – தனிநபரின் கடன் சுமை

0
498

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்கு வந்த பின்னர் கடந்த இரண்டு வருடங்களில் நாட்டின் மொத்தக் கடன் 525,200 மில்லியன் ரூபாவால் அதிகரித்துள்ளதாக புதிய புள்ளிவிபர தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை மத்திய வங்கியின் 2021ஆம் ஆண்டின் வருடாந்த அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கடன் அதிகரிப்பு காரணமாக 2021ஆம் ஆண்டின் இறுதிக்குள் தனிநபர் கடன் சுமை 882,150 ரூபாயாக அதிகரித்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வரும் போது அந்த தொகை 643,422 ரூபாயாகும். அதற்கமைய, கடந்த இரண்டு வருடங்களில் தனிநபர் கடன் சுமை 238,728 ரூபாயாக அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.