போர் நிறுத்தம் மேலும் இரு நாட்களுக்கு நீட்டிப்பு

0
171

இஸ்ரேஸ் – ஹமாஸ் இடையிலான போர் நிறுத்தம் மேலும் இரு நாட்கள் நீடிப்பதாக தெரிவிக்கப்படுள்ளது. நான்கு நாள் மோதல் இடைநிறுத்தம் முடிவிற்கு வருவதற்கு சற்று முன்னர் கட்டார் இதனை அறிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து மூன்று வயது சிறுவன் உட்பட 11 பணயக்கைதிகளை ஹமாஸ் விடுதலை செய்துள்ளது. அதேவேளை இதுவரை ஹமாஸ் 50 பணயக்கைதிகளை விடுதலை செய்துள்ளது.

போர் நிறுத்தம் மேலும் இரு நாட்களிற்கு நீடிப்பு | The Ceasefire Was Extended For Two More Days

ஹமாஸ் பணய கைதிகளை விடுதலை செய்ததற்கு பதிலாக 30 சிறுவர்கள் மூன்று பெண்கள் உட்பட 33 பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலிய சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

அதேவேளை கடந்த மாதம் 7 ஆம் திகதி ஹமாஸ் திடீரென  இஸ்ரேல் மீது தாக்குதலை நடத்திய நிலையில் இஸ்ரேல் – ஹமாஸ் போர் தொடங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.