பாகிஸ்தானில் சொகுசு கார் ஒன்றை செலுத்தி வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்றுக் கொண்டிருந்த தந்தை மற்றும் மகளை கொன்ற தொழிலதிபரின் மனைவி கமராவை பார்த்து வில்லத்தனமாக சிரித்த வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகின்றது. இந்த விபத்து சம்பவம் ஓகஸ்ட் 19 ஆம் திகதி பாகிஸ்தான் தலைநாகர் கராச்சியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
காரச்சியில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் தொழிலதிபரின் மனைவி ஓட்டி வந்த சொகுசு கார் மோதி சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டுறதுந்த தந்தை மற்றும் மகள் ஆகிய இருவர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த விபத்தில் உயிரிழந்தவர்கள் கடைகளுக்கு பேப்பர் விற்பனை செய்யும் இம்ரான் ஆரிப் மற்றும் அவரது மகள் ஆம்னா என்று பின்னர் தெரியவந்தது. குறித்த விபத்தில் மேலும் 3பேர் படுகாயமடைந்துள்ளனர். விபத்து ஏற்படுத்தியதும் காரை பொதுமக்கள் சூழ்ந்த நிலையில் பொலிஸாரும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
அப்போது காரை விட்டு இறங்கிய அந்த பெண் இரண்டு பேரை கொன்றுவிட்டோமே என்ற குற்றவுணர்வு துளியும் இல்லாமல் கமராவை பார்த்து வில்லத்தனமாக சிரித்த வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகின்றது.
விபத்து ஏற்படுத்திய அந்த பெண் நடாஷா டானிஷ் என்பதும் பாகிஸ்தானின் பணக்கார குடும்பம் ஒன்றை சேர்த்தவர் என்பதும் தெரியவந்தது.
விபத்து தொடர்பாக நடாஷாவிடம் விசாரணை நடந்து வந்த நிலையில் இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு நேற்று வந்தது.
அப்போது, நடாஷாவுக்கு மன ரீதியான பிரச்சனை உள்ளதென்றும் கடந்த 2005 முதல் அவர் சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் தெரிவித்தார். மேலும் நீதிபதி முன்னாள் உயிரிழந்த தந்தை மகளின் உறவினர்களும், நடாஷாவின் உறவினர்களும் தோன்றினர்.
அப்போது உயிரிழந்தவர்களின் உறவினர்கள் நடாஷாவுக்கு மன்னிப்பு வழங்கியதால் நீதிமன்றம் நடாஷாவுக்கு ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து நடாஷா குடும்பத்திடமிருந்து பணம் வாங்கிக் கொண்டு அவர்கள் மன்னிப்பு வழங்கியுள்ளனர் என்று சமூக வலைத்தளங்களில் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.