வரவு செலவுத் திட்டம் வெற்றிகரமாக அமைய வேண்டும் – எதிர்க்கட்சித் தலைவர்

0
4

வரவு செலவுத்திட்டம் வெற்றிகரமாக அமைய வேண்டும் என தான் மனதார பிரார்த்திப்பதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். இன்று (21) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

வரவு செலவுத் திட்டத்தில் காணப்படும் மக்கள் நல நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்கு நாங்களும் ஆதரவளிப்போம் எனவும் அவர் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் மேலும் கருத்து தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர்,

“வளமான நாடு, அழகான வாழ்வு என்ற கொள்கையை மக்கள் ஆணையைப் பெறுவதற்காக நீங்கள் முன்வைத்தீர்கள். குறித்த கொள்கை தொகுப்பில் உள்ளடங்கும் விடயங்கள் வரவு செலவு திட்டத்தில் எந்தளவு உள்ளடங்குகின்றன உன்பதை ஆராய்ந்து பாருங்கள்.

வழங்கப்பட்ட மக்கள் ஆணைக்கு ஏற்ப இந்த வரவு செலவுத் திட்டம் உருவாக்கப்படவில்லை என்பது எங்களுடைய கருத்து. மக்கள் சார்ந்த புதிய பயணத்தை மேற்கொண்டிருக்கலாம்” எனத் தெரிவித்தார்.