இந்தியாவில் பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம் பெண் குழந்தையை மண்ணுக்குள் புதைத்த கொடூர சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
குஜராத்தின் சபர்கந்தா மாவட்டத்தில் உள்ள கம்போய் கிராமத்தை சேர்ந்தவர் கோகிலாபென். விவசாயியான இவர் தனது விவசாய நிலத்திற்கு சென்றுள்ளார்.
அப்போது அங்கிருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டதை அடுத்து சத்தம் கேட்கும் இடத்தை தேடி சென்று பார்த்த போது, மண்ணுக்குள் இருந்து குழந்தையின் அழுகை சத்தம் வந்துள்ளது.

இதனால் அச்சம் அடைந்த அவர் அருகில் உள்ள மின்சார வாரியத்தில் பணியாற்றும் ஊழியர்களிடம் தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அங்கு வந்த ஊழியர்கள் அந்த இடத்தை தோண்டியதில் பிறந்து சில மணி நேரங்களே ஆன பெண் குழந்தை ஒன்று புதைக்கப்பட்டு இருந்தது.
உடனடியாக குழந்தையை மீட்டு எம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு குழந்தைக்கு வைத்தியர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பிறந்து சில நாட்களே ஆன குழந்தை உயிருடன் புதைக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.