கல்பிட்டியில் 12 வயது சிறுவனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு வாகனம் இல்லாததால் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிறுவனை சைக்கிளில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதிலும் மீட்க முடியவில்லை என பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
நேற்று பிற்பகல் திடீரென நோய்வாய்ப்பட்ட சிறுவனை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பல மணித்தியாலங்கள் வாகனங்களுக்கு காத்திருந்த போதிலும் வாகனம் ஒன்றை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில் சிறுவனை சைக்கிளில் வைத்து பல மணி நேரம் போராடி அழைத்து செல்ல சிறுவனின் சகோதரன் முயற்சித்துள்ளார். எனினும் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சிறுவன் உயிரிழந்துள்ளார்.
ஒன்றரை மணித்தியாலத்திற்கு முன்னர் அழைத்து சென்றிருந்தால் சிறுவனை காப்பாற்றியிருக்கலாம் என கூறப்பட்டுள்ளது. தேனீ தீண்டியதால் சிறுவனுக்கு உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதன்போது அழைத்து வரும் வழியில் சிறுவனுக்கு சுயநினைவில்லாமல் போயுள்ளது. வாகனம் கிடைத்திருந்தால் இன்று மகன் உயிருடன் இருந்திருப்பார் என பெற்றோர் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.