தலவாக்கலை நீர்த்தேக்கத்தில் மிதந்த பெண்ணின் சடலம்

0
825

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல் கொத்மலை நீர்தேக்கத்திலிருந்து இன்று முற்பகல் உருக்குலைந்த நிலையில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

நீர்த்தேக்கத்தில் சடலமொன்று மிதப்பதைக்கண்ட பிரதேசவாசிகள் தலவாக்கலை பொலிஸாருக்கு அறிவித்த நிலையில் சடலம் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் உயிரிழந்த பெண் நீரில் அடித்து இழுத்துச் செல்லப்பட்டாரா அல்லது கொலையா அல்லது வேறு ஏதேனும் காரணங்களா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அதேசமயம் மீட்கப்பட்ட சடலம் இதுவரை யாருடையது என அடையாளம் காணப்படாத நிலையில் சடலம் வைத்திய பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.