நீச்சல் குளத்தில் இருந்து 17 வயது சிறுமியின் சடலம் மீட்பு!

0
401

மஸ்கெலியா – மொக்கா தோட்டத்தை சேர்ந்த 17 வயதான சிறுமி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கம்பஹா காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.

நைவல வீதி – உடுகம்பளை பகுதியிலுள்ள வீட்டுக்கு குறித்த சிறுமி தொழிலுக்கு சென்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந் நிலையில் குறித்த வீட்டிலுள்ள நீச்சல் தடாகத்தில் இருந்து சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக கம்பஹா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக கம்பஹா காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர். சடலம் மீதான பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளது.

குறித்த சிறுமி பணியாற்றிய வீட்டின் உரிமையாளர் ஆளும் தரப்பின் சிரேஷ்ட அரசியல்வாதி ஒருவரின் உறவினர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.