ஸ்ரீதிவ்யா சினிமா வாய்ப்பை இழந்ததன் பின்னணி..

0
179

ஒரே படத்தால் புகழ்பெற்ற நடிகை ஸ்ரீதிவ்யா கோலிவுட் பக்கம் இருந்து காணாமல் போன பின்னணி குறித்து பேசியுள்ளார் பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு.

2013ம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம்.

இந்த படத்தில் நாயகியாக நடித்திருப்பார் ஸ்ரீதிவ்யா, பக்கத்து வீட்டு பெண் என முகபாவனையால் அசாத்திய நடிப்பால் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.

இதனாலேயே அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிய தமிழிலில் கொடிகட்டி பறப்பார் என கருதப்பட்டது.

ஆனால் கோலிவுட்டே அவரை ஒதுக்கிவிட்டது, இதற்கான காரணம் குறித்து பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு அளித்துள்ள பேட்டியில், பிரபல நடிகரின் வீட்டு கிரகப்பிரவேசத்துக்கு ஸ்ரீதிவ்யா சென்றிருக்கிறார்.

அங்கு மது விருந்து அளிக்கப்பட்டு இருக்கிறது, இதை குடித்து ஸ்ரீதிவ்யா குத்தாட்டம் போட்டுள்ளார், இந்த வீடியோ காட்சிகள் வைரலானது.

நான் இதை நம்பாமல் விசாரித்தேன், அது ஸ்ரீதிவ்யா தான் என்றார்கள், வளர்ந்து வரும் நடிகை இப்படி செய்யலாமா?

வளர்ச்சியை தடுக்கவே ஒரு கூட்டம் வேலை செய்யும், அவர்களுக்கு ஏதுவாய் போனது, இதனாலேயே ஸ்ரீதிவ்யாயை கோலிவுட் ஒதுக்கிவிட்டது என தெரிவித்துள்ளார்.

பிரபல நடிகையாக வலம் வந்த ஸ்ரீதிவ்யாவை கோலிவுட் தூக்கி எறிந்த கதையை அறம் நாடு சேனலுக்கு பத்திரிகையாளர் செய்யாறு பாலு பகிர்ந்து இருக்கிறார்.