ஆபிரிக்க நாடான காபோனின் ஜனாதிபதித் தேர்தலில் அலி போங்கோ ஒன்டிம்பா மீண்டும் வெற்றியீட்டியுள்ளார். எனினும் தேர்தலை இரத்துச் செய்வதாவும் ஆட்சியை கைப்பற்றியுள்ளதாகவும் காபோனின் இராணுவம் இன்று அறிவித்துள்ளது.
காபோனில் அலி பெங்கோ ஒன்டிம்பா 2009 ஆம் ஆண்டு முதல் ஜனாதிபதியாக பதவி வகித்து வந்த நிலையில் கடந்த சனிக்கிழமை அங்கு ஜனாதிபத் தேர்தல் நடைபெற்றது.
மீண்டும் வெற்றியீட்டிய ஜனாதிபதி

தேர்தலில் அலி போங்கோ ஒன்டிம்பா (President Ali Bongo Ondimba) மீண்டும் வெற்றியீட்டினார் என காபோனின் தேசிய தேர்தல் ஆணைக்குழு இன்று (30) அறிவித்தது.
அதன்பின் சிறிது நேரத்தில் இத்தேர்தலை தாம் இரத்துச் செய்துள்ளதாக அந்நாட்டின் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் குழுவொன்று தொலைக்காட்சியில் அறிவித்தது.
நடைபெற்ற தேர்தல் நம்பகத்தன்மையற்றது என்பதால் அதை தாம் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளதாகவும், அரச நிறுவனங்கள் அனைத்தும் கலைக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவத்தினர் அறிவித்துள்ளனர்.