யாழில் பழமை வாய்ந்த கோவிலில் இராணுவம் கைவரிசை! வடக்கில் தொடரும் இராணுவத்தின் அடாவடித்தனம்

0
302

இராணுவத்தின் கட்டுப்பாட்டு பிரதேசங்களிலுள்ள ஆலயங்களில் தொடர்ச்சியாக சிலைகள் களவாடப்படுவதாக ஆலய நிர்வாகங்களால் முறைப்பாடு தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, யாழ்ப்பாணம் பலாலி பகுதியில் உள்ள அம்மன் ஆலயத்தில் உள்ள சிலைகள் களவாடப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த ஆலயத்துக்குள் செய்வதற்கு இராணுவத்தினரின் அனுமதி பெறப்பட வேண்டிய நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர்.

இத்தகைய சம்பவங்கள் வட, கிழக்கின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்று வருகின்றமை இந்து மாமன்றம் உள்ளிட்ட பல்வேறு இந்து சமய அமைப்புக்களும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.

வடக்கில் தொடரும் இராணுவத்தின் அடாவடித்தனம்!!!

இதேவேளை, வவுனியா வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் பலாலியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் சிலைகள் களவாடப்பட்டுள்ளமை தொடர்பில் பலாலி காவல்துறையினரிடம் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளதாகவும் ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் அவ்வாறான முறைப்பாடுகள் எதுவும் தங்களுக்கு கிடைக்கவில்லை என பலாலி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இத்தகைய திருட்டு சம்பவங்களின் பின்னணியில் இராணுவத்தினரின் ஈடுபடுவதாகவும், இத்தகைய சிலைகள் தென்னிலங்கையில் நல்ல விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் சிங்கள ஊடகங்கள் அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது