விமானத்தில் ஏற்பட்ட அசம்பாவிதம்… மேலாடைகளை கழட்டிய பயணிகள்!

0
87

கிரீஸ் நாட்டின் எதென்ஸ் நகரிலிருந்து கத்தார் தோகாவிற்கு கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 777 விமானம் புறப்பட தயாராக இருந்துள்ளது. அப்போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக குறித்த விமானத்தில் ஏ.சி. வேலை செய்யவில்லை. 

கிரீஸ் நாட்டில் தற்போது 34 டிகிரி வெயில் சுட்டெரிக்கிறது. சுமார் 3 மணித்தியாலங்கள் பயணிகள் விமானத்திற்குள்ளேயே அமர்ந்து இருக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் பயணிகள் வியர்வையால் நனைந்தனர்.

பெரும்பாலான பயணிகள் குறிப்பாக ஆண் பயணிகள் தங்களது மேலாடையை கழிற்றினர். தங்கள் மீது வடிந்தோடும் வியர்வையை சட்டையால் துடைத்துள்ளனர்.

@dailymirror

Passengers were forced to strip off after being trapped for hours on a 38 degrees sauna plane #dailymirror #breakingnews #aeroplane #airport #fyp

♬ original sound – Daily Mirror

அதேவேளையில் சில பெண் பயணிகள் அதிக வியர்வை காரணமாக மயக்கமடைந்தனர். இதனால் அருகில் இருந்த மற்ற பயணிகள் காற்று வீசி அவர்களுக்கு உதவி செய்தனர். 

பின்னர் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு விமானத்தில் இருந்து பயணிகள் தரையிறக்கப்பட்டனர். இவ்வளவு அவதிப்பட்ட அவர்களுக்கு ஒரு கப் தண்ணீரும், சிறு குளிர்பானம் மட்டுமே வழங்கப்பட்டதாக ஆதங்கம் தெரிவித்தனர். சுமார் 16 மணித்தியால காலதாமதத்திற்கு பிறகு மாற்று விமானம் மூலம் பயணிகள் தோகா சென்றடைந்தனர்.