சமூக, சமய, நல்லிணக்கத்தை பாதுகாப்பதில் தவெக 100% உறுதியாக இருக்கும் – விஜய்

0
26

“சமூக, சமய, நல்லிணக்கத்தை பாதுகாப்பதில் தவெக 100% உறுதியாக இருக்கும் என்றும் அதில் எந்தவிதமான சமரசமும் கிடையாது என்றும் தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்

சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில் தவெக சார்பில் செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் நடைபெற்ற விழாவில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

கண்டிப்பாக ஒரு ஒளி பிறக்கும். அந்த ஒளி நம்மை வழிநடத்தும். தமிழ்நாட்டு மண், தாயன்பு கொண்ட மண். ஒரு தாய்க்கு எல்லா பிள்ளைகளும் ஒன்றுதானே. அதுபோல பொங்கல், ரம்ஜான், கிறிஸ்துமஸ் என எல்லா பண்டிகைகளையும் பகிர்ந்துகொள்ளக் கூடிய ஊர்தான் நமது ஊர்.

நமது கொள்கைகளுக்கு மதச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கைகள் எனப் பெயர் வைத்ததே இந்த உறுதியினால் தான். அனைத்துப் புகழும் எல்லாம் வல்ல இறைவனுக்கே.. நம்பிக்கையுடன் இருங்கள். நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம்” என்று அவர் தெரிவித்தார்.