கிரிக்கெட் களத்தில் சிக்ஸருக்காக சண்டையிட்ட தளபதி விஜய்: பாடலாசிரியர் விவேக் வெளியிட்ட காணொளி

0
348

வாரிசு படப்பிடிப்பின் போது நடிகர் விஜய் கிரிக்கெட் களத்தில் தனது அணிக்காக செல்லச் சண்டையிட்ட காணொளி ஒன்றை தனது எக்ஸ் தளத்தில் பாடலாசிரியர் விவேக் வெளியிட்டுள்ளார்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படத்தில் பிசியாக நடித்து வருகின்றார்.

இதன் படப்பிடிப்புகள் மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்று வருகின்றது. இலங்கையிலும் படப்பிடிப்புகள் நடக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் வாரிசு படப்பிடிப்பின் போது நடிகர் விஜய் கிரிக்கெட் விளையாடிய காணொளி ஒன்றை பாடலாசிரியர் விவேக் வெளியிட்டுள்ளார். அதில் விஜய் தனது அணிக்காக செல்லச் சண்டையிடுகின்றார்.

தனது அணியில் இருந்த ஒருவர் பந்தை உயர்த்தி அடிக்க அது சிக்ஸருக்கு பறந்தது. எனினும் எதிரணியினர் அதனை நான்கு ஓட்டங்கள் என குறிப்பிட்டனர்.

எனினும் நடிகர் விஜய் அதை மறுத்து இல்லை அது சிக்ஸ்… சிக்ஸ்… என்று வாக்குவாதம் செய்து தனது அணிக்கு கைதட்டி சப்போர்ட் செய்யும் காணொளியை பாடலாசிரியர் விவேக் வெளியிட்டுள்ளார்.இந்த காணொளியை விஜய் ரசிகர்கள் வைரலாக்கியுள்ளனர்.