ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் திரைப்படங்கள் மூலம் கோலிவுட்டில் மாஸ் காட்டினார் இயக்குநர் அட்லீ. அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் ஹீரோவாக நடித்த ஜவான், செப்டம்பர் 7ம் திகதி வெளியானது.
ஷாருக்கானுடன் விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், நயன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்த ஜவான், ஆயிரம் கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது.
இதனால் பாலிவுட்டிலும் அட்லீயின் மார்க்கெட் வேல்யூ அதிகரித்துள்ளது. முன்னதாக ஜவான் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கும் போதே மும்பையில் வீடு வாங்கினார் அட்லீ.
சமீபத்தில் தான் விஜய் – ஷாருக்கான் இணைந்து நடிக்கும் படத்திற்காக கதை எழுதி வருவதாக கூறியிருந்தார் அட்லீ. இதுவே தனது அடுத்தப் படமாக இருக்கும் என அட்லீ ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். இதனால் விரைவில் விஜய் – ஷாருக்கான் – அட்லீ கூட்டணி குறித்து அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
