இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில் பத்தாம் வகுப்பு மாணவி பாடசாலையில் வைத்து துஷ்பிரோயகம் செய்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
உத்தர பிரதேசத்தில் அயோத்தியிலுள்ள சன்பீம் என்ற தனியார் பாடசாலை உள்ளது. இந்த பாடசாலையில் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியை பள்ளிக்கு வருமாறு தொலைபேசி மூலம் ஆசிரியர்கள் அழைத்துள்ளனர்.
இந்நிலையில் பாடசாலைக்கு சென்ற 15 வயது மாணவி அடுக்குமாடி கட்டிடத்திலிருந்து தவறி விழுந்து உயிரிழந்துவிட்டதாக மாணவியின் பெற்றோருக்கு தகவல் வந்துள்ளது.

இதன்போது செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனே பாடசாலைக்கு சென்று விசாரிக்கையில் அவர்கள் சரியாக காரணத்தை கூறாமல் இருந்திருக்கின்றனர்.
இதனை தொடர்ந்து சந்தேகம் அடைந்த பெற்றோர் அருகிலிருக்கும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். பின்னர் பாடசாலைக்கு சென்று அங்குள்ள சிசிடிவியை பரிசோதித்த பொலிஸார், மாணவி மாடியிலிருந்து தூக்கி விசப்பட்டத்தை கண்டறிந்துள்ளனர்.

அச்சமயம் பாடசாலையிலிருந்த ஆசிரியர்களை பொலிஸார் விசாரிக்கையில், மாணவியை ஆசிரியர் அபிஷேக் மற்றும் மேலாளர் யாதவ் ஆகியோர் சேர்ந்து கூட்டு பாலியல் துஷ்பிரோயகம் செய்தது அம்பலமாகியுள்ளது.
பின்னர் மாணவியை மாடியிலிருந்து தூக்கி வீசியிருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் பாடசாலையின் முதல்வரும் சம்மந்தப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனை தொடர்ந்து குற்றவாளிகளை கைது செய்த பொலிஸார் அவர்கள் மீது துஷ்பிரோயகம் மற்றும் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர்.
