ஜப்பானிய துணை நிதியமைச்சர் Kenji Kanda பதவி விலகியுள்ளார். வரி செலுத்துவதில் தவறிழைக்கப்பட்டதாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து அவர் பதவி விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலைமையானது ஜப்பான் பிரதமர் Fumio Kishida வுக்கு மற்றுமொரு அடியாக அமைந்துள்ளது என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அரசாங்கப் பத்திரங்கள் மற்றும் நாணயக் கொள்கைகளுக்குப் பொறுப்பான நிதியமைச்சர் Kenji Kanda இந்த விடயம் பாராளுமன்ற விவாதத்தை சீர்குலைக்க விரும்பாததால் தாம் பதவி விலகுவதாக தெரிவித்துள்ளார்.
Kenji Kanda வுக்குச் சொந்தமான தனியார் நிறுவனம் ஒன்று பல்வேறு சந்தர்ப்பங்களின் போது வரி செலுத்துவதற்கு தவறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே பிரதமர் Fumio Kishida தமது மைச்சரவையை மாற்றியமைத்து இரண்டு மாதங்களில் பதவி விலகும் மூன்றாவது அதிகாரி Kenji Kanda ஆவார்.