மத்திய வங்கியின் ஆளுனர் நந்தலால் வீரசிங்க இந்த நாட்டின் ஜனாதிபதியைப் போன்று செயற்படுவதாக இலங்கை ஐக்கிய தொழில்முனைவோர் மன்றத்தின் தலைவி டானியா அபேசுந்தர தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கிகளின் அறிவற்ற முடிவுகளினால் நாட்டின் ஒட்டுமொத்த வணிக அமைப்பும் அழிந்துவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

சாமானிய மக்களை அழிக்கும் மத்திய வங்கி
மத்திய வங்கி இன்று பன்னாட்டு நிறுவனங்களின் தேவைக்கேற்ப செயல்பட்டு சாமானிய மக்களை அழித்து பன்னாட்டு நிறுவனங்களை மகிழ்விப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
முன்னாள் தலைவர் நிவார்ட் கப்ரால் பின்பற்றிய பாதையை நந்தலால் வீரசிங்கவும் பின்பற்ற வேண்டும் என்றும் இலங்கை ஐக்கிய தொழில்முனைவோர் மன்றத்தின் தலைவி டானியா அபேசுந்தர தெரிவித்துள்ளார்.

அனைத்து வங்கி அமைப்புகளும் வீழ்ச்சியடையும்
உள்ளூர் வர்த்தகர்களை அழிப்பதன் மூலம் இந்த நாட்டில் உள்ள அனைத்து வங்கி அமைப்புகளும் வீழ்ச்சியடையும் என்று அவர் சுட்டிக்காட்டுகிறார். சேனலில் ஒன்றில் இடம்போற்ற நேர்காணலின்போதே குறித்த விடயத்தை அவர் தெரிவித்துள்ளார்.