பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸின் முடிசூட்டு விழாவைக் குறிக்கும் முதல் கனேடிய கௌர பதக்கம் தமிழர்களான கணேசன் சுகுமார், குலா செல்லத்துரை ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
குறித்த முடிசூட்டு பதக்கம் என்பது மாட்சிமை பொருந்திய மன்னர் மூன்றாம் சார்லஸின் முடிசூட்டு விழாவைக் குறிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட கனடிய கௌரவமாகும்.

கனடாவிற்கும் அவர்களின் சொந்த மாகாணத்திற்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்தவர்களை அங்கீகரிக்கிறது. கனடாவின் கவர்னர் ஜெனரல் மேரி சைமன் அவர்களால் இந்த கௌரவம் தொடங்கப்பட்டது.
இந்த பதக்கம் நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான சமூக சேவை மற்றும் மாற்றத்தை உருவாக்க உதவும் தனிநபர்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.