இந்திய பிரதமரை சந்திக்கவுள்ள தமிழரசுக் கட்சியின் தலைவர் சிவஞானம் சிறீதரன்..

0
366

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சிவஞானம் சிறீதரன் தலைமையிலான தமிழ்க் கட்சிகளை இந்திய பிரதமர் நரேந்திர மோதியை நேரில் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக அரசியல்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதுடெல்லியின் அடுத்து வரும் வாரங்களில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் 

2024ஆம் ஆண்டை தேர்தல் வருடமாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.

இந்நிலையில் இலங்கையின் முக்கிய அரசியல் கட்சிகளுடன் இந்திய அரசாங்கம் கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.