தமிழ் தேசியத்துக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்று முன்னாள் போராளியும் ஜனநாயக போராளிகள் கட்சியின் செயலாளருமான இ.கதிர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் போராளிகளுக்கு புலம்பெயர் தமிழர்கள் புரிந்து வரும் உதவிகள் தொடர்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பேச்சாளர் காண்டீபன் கூறியிருந்த கருத்து அண்மையில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பேச்சாளர் காண்டீபனின் அந்தக் கூற்று தொடர்பில் ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கூறுகையில்,
“முள்ளிவாய்க்காலில் ஆயுத போராட்டம் மௌனிக்கப்பட்ட சூழலில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு அரசியல் இயக்கமாக, அரசியல் போராட்டங்களை முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகள் தேசிய தலைவர் பிரபாகரனால் செய்யப்பட்டது.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தலைமையில் அரசியல் அணி விடுதலைப் புலிகளின் தலைவரால் நியமிக்கப்பட்டது.
இதை தவிர தமிழீழ விடுதலைப் புலிகளின் தொடர்ச்சியாக எந்த அணிகளையோ அல்லது தாயகத்திலிருந்து அரசியல் கட்சிகளையோ தலைமை நியமிக்கவும் இல்லை அவர்களிடம் எந்த பொறுப்புக்களும் வழங்கப்படவும் இல்லை.” என கூறியுள்ளார்.