கொழும்பிலுள்ள கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் வீட்டினை கும்பலொன்று சுற்றிவளைத்து அச்சுறுத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சிங்களவர்களுக்கும் வடக்கில் சுதந்திரம் வேண்டும்
இதன்போது ஆர்ப்பாட்ட குழுவினர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் அரசியல்வாதிகள் தெற்கில் சுதந்திரமாக வாழ்வதை போன்று சிங்களவர்களும் வடக்கு மற்றும் கிழக்கில் சுதந்திரமாக வாழ வேண்டும் எனத் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகின்ற நிலையில் அங்கு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தகவல்கள் கூறுகின்றன.
