தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் இரு முக்கியஸ்தர்கள் துப்பாக்கிகளுடன் இருக்கும் புகைப்படம் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
கொக்கு சுடுவதற்காக இந்த ஆயுதம் பாவிக்கப்படுவதாக கூறப்படுகின்ற போதிலும் எதிர்காலங்களில் மனிதர்களையும் வேட்டையாடலாம் என மக்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
அரசியல் கட்சியொன்றின் முக்கியஸ்தர்கள் மற்றும் மாநகரசபை உறுப்பினராக இருந்தவர்கள் இவ்வாறு ஆயுதங்களுடன் காட்சியளிப்பது பீதியை ஏற்படுத்தும் செயற்பாடாக இருக்கின்றதாகவும் சொல்லப்படுகிறது.
இது தொடர்பாக உடனடியாக பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கொக்குகள் மீது பாயும் குண்டுகள் மனிதர்கள் மீது பாய்வதற்கு முன் துரிதகதியில் நடவடிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் தெரிவித்துள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

