தமிழ் வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் மரண விவகாரம்: வெளிவந்த நீதிமன்ற உத்தரவு

0
275

கொழும்பில் உயிரிழந்த தமிழ் வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் கையடக்க தொலைபேசி சிம் அட்டையை அவரது மனைவியிடம் ஒப்படைப்பது தொடர்பான கோரிக்கை அரசாங்கத்தின் நிபுணர் அறிக்கை கிடைத்த பின்னர் பரிசீலிக்கப்படும் என கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெக்குனுவெல தெரிவித்துள்ளார்.

கொழும்பினை சேர்ந்த தமிழ் வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் பொரளை பொது மயானத்தில் காரில் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டதுடன், பின்னர் தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார்.

இதற்கமைய, தனது கணவர் உயிரிழப்பதற்கு முன்னர் பயன்படுத்திய தொலைபேசி இலக்கத்திற்கான புதிய சிம்கார்டைப் பெற்றுக் கொள்வதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு தினேஷ் ஷாப்டரின் மனைவி விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழ் வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் உயிரிழப்பு விவகாரம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Suspicion Murder Businessman Dines Chapter

வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் கொலை தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வரும் நிலையில், கோரிக்கையை நிராகரிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றில் முன்வைத்த கோரிக்கையை முன்னாள் நீதவான் பரிசீலித்துள்ளார்.

தொலைபேசி எண் தொடர்பில் விசாரணை

இதற்கமைய, அவர் உயிரிழப்பதற்கு முன்னர் பயன்படுத்திய தொலைபேசி எண், விசாரணைக்கு இடையூறாக இருக்கலாம் என்ற காரணத்தினால் அவரது கோரிக்கையை நிராகரித்து நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

தமிழ் வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் உயிரிழப்பு விவகாரம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Suspicion Murder Businessman Dines Chapter

சிம் அட்டை வழங்குவதற்கான கோரிக்கை நிராகரிக்கப்பட்ட போதிலும், வர்த்தக நடவடிக்கைகளுக்கு தொலைபேசி இலக்கம் அத்தியாவசியமாகியுள்ளதாகவும் அவரது சட்டத்தரணி மீண்டும் மன்றில் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், உயிரிழந்தவரின் கைத்தொலைபேசி அரசாங்க பரிசோதகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.