தமன்னாவின் அடுத்த தரமான சம்பவம்: காவாலா, அச்சச்சோ எல்லாம் ஓரம்போங்க..

0
116

அமர் கெளசிக் இயக்கத்தில் இந்தியில் உருவாகியுள்ள ஸ்ட்ரீ 2 படத்தில் தமன்னா நடனமாடிய புதிய பாடல் வீடியோ வெளியாகி இணையத்தையே ஆட்டிப்படைத்து வருகிறது. தமன்னாவின் ரசிகர்கள் ரிப்பீட் மோடில் அந்த பாடலை பார்த்து உற்சாகமடைந்து வருகின்றனர்.

ஷ்ரத்தா கபூர், ராஜ்குமார் ராவ், பங்கஜ் திரிபாதி உள்ளிட்ட பலர் நடித்துள்ள ஸ்ட்ரீ 2 திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15ம் திகதி வெளியாகிறது.

ஜெயிலர் படத்துக்கு பெரிய ஹைப்பே இல்லாமல் இருந்த நிலையில், அனிருத் இசையில் தமன்னா தாறுமாறாக நடனமாடிய காவாலா பாடல் தான் அந்த படத்திற்கு முதல் புரமோஷனாக அமைந்தது.

அதன் பின்னர், சுந்தர். சி இயக்கி நடித்த அரண்மனை 4 படத்தில் தமன்னா மற்றும் ராஷி கன்னாவை வைத்து படத்துக்கான புரமோஷன் பாடலாக அச்சச்சோ பாடலை உருவாக்கி தியேட்டரை விட்டு வெளியே வர முடியாத அளவுக்கு சுந்தர். சி. சம்பவம் செய்து விட்டார். அதனை தொடர்ந்து இந்தியில் உருவாகியுள்ள ஸ்ட்ரீ 2 பட பாடலும் ரசிகர்களை கவர்ந்து வருகின்றது.