நடிகை தமன்னாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் இணையத்தினை ஆக்கிரமித்துள்ளது. தமிழ் சினிமா முன்னணி நடிகர்களான விஜய், அஜித், தனுஷ், ஜெயம் ரவி என அனைவருடனும் தமன்னா நடித்துள்ளார். தமிழ் திரையுலகில் 2006ஆம் ஆண்டு கேடி திரைப்படத்தின்மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தமன்னா பாட்டியா.
மும்பையைச் சேர்ந்த இவர் முதலில் 2005ஆம் ஆண்டு சாந்த் சா ரோஷன் சேஹ்ரா என்ற இந்தி திரைப்படத்தில் அறிமுகமானார். அதன்பிறகு, தமிழ், தெலுங்கு என தென்னிந்திய திரைப்படங்களில் முன்னணி கதாநாயகியாக வலம்வந்தார் தமன்னா.
இவருடைய நடனத்திற்கென்றே தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. இந்நிலையில், அவர் ராதா கிருஷ்ணா போன்ற லுக்கில் போட்டோஷூட் எடுத்து இருக்கிறார். இது ரசிகர்களை கவர்ந்து வருகின்றது.




