பிக்பாஸ் சீசன் 6 சீசன் தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. வீட்டில் எல்லா பெண்களிடமும் சில்மிஷம் செய்தும் தடவியும் வந்த அசல் கோளாறு கடந்த வாரம் கமல் ஹாசன் அவர்களாக வெளியேற்றப்பட்டார். இதுகுறித்து அசல் கோளாறு பேட்டிக்கொடுத்து விளக்கமும் அளித்திருந்தார்.
என் வீட்டில் இப்படி தான் இருப்பேன் அவர்களிடம் இப்படி தான் நடந்து கொள்வேன் என்று கூறியிருந்தார். இந்நிலையில் அசல் கோளாறு சும்மாக இருந்தாலும் பிக்பாஸ் நிவி அவரை உசுப்பேற்றி நெருக்கமாக நடந்து கொண்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழையாது என்பதற்கு ஏற்ப, அசல் கோளாறு செய்த செயலுக்கு இணையாக நிவியும் அவருடன் நெருக்கமாக நடந்து கொண்டுள்ளார்.
ஆனால் அனைவரும் ஒருவரை மட்டுமே குற்ற கூறக்கூடாது என்றும் சிலர் அசல் கோளாறுக்கு ஆறுதலான கருத்தினை போட்டு வருகிறார்கள்.