ரி20 உலகக்கிண்ணக் கிரிக்கெட் தொடர் இலங்கையில் இடம்பெறவுள்ள நிலையில், தொடருக்கான கிண்ணம் யாழ்ப்பாணத்துக்கும் எடுத்துவரப்படவுள்ளது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ரி20 உலகக்கிண்ணக் கிரிக்கெட் தொடரின் ஆட்டங்கள் இம்முறை இலங்கையிலும் இந்தியாவிலும் நடைபெறவுள்ளன.
பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி நெதர்லாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் கொழும்பில் நடைபெறும் ஆட்டத்துடன் உலகக்கிண்ணத் தொடர் ஆரம்பமாகின்றது.
உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் கோப்பையை இந்நாட்டில் காட்சிப்படுத்தும் சுற்றுப்பயணம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.



