டி20 உலகக் கிண்ணம்; மக்களுக்கு இலவச அனுமதி

0
23

கொழும்பு, ஆர்.பிரேமதாச மைதானத்தில் இன்று (11) நடைபெறும் 2026 ஐசிசி ஆடவர் டி:20 உலகக் கிண்ணத்தின் அவுஸ்திரேலியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியை பார்வையிட பொது மக்களுக்கு இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் 4 மற்றும் 5 வாயில்கள் வழியாக ரசிகர்கள் மைதானத்திற்குள் நுழையலாம் என்று ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

வாயில்கள் பிற்பகல் 1.00 மணிக்கு திறக்கப்படும், என்றும் போட்டி பிற்பகல் 3.00 மணிக்கு தொடங்கும். அதேவேளை இன்றைய போட்டி தொடரில் அவுஸ்திரேலிய அணி எதிர்கொள்ளும் முதல் போட்டியாகும்.