உடுவில் பேருந்து நிலையத்தில் காத்திருந்த இளைஞர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்

0
627

பேருந்து தரிப்பிடத்தில் காத்திருந்த இளைஞன் மீது வன்முறை கும்பல் ஒன்று வாள் வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளது என தகவல்கள் கிடைக்க பெற்றுள்ளன.

உடுவில் பிரதேச செயலகத்திற்கு அருகில் உள்ள பேருந்து நிலையத்தில் காத்திருந்த இணுவில் காரைக்கால் பகுதியை சேர்ந்த இளைஞன் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த இளைஞன் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

பேருந்து தரிப்பிடத்தில் காத்திருந்த இளைஞன் மீது வாள் வெட்டுத் தாக்குதல் | Man Was Waiting At Bus Stand Was Attacked