யாழில் போதைப் பொருளுடன் கைதாகி பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் , அங்கிருந்து தப்பி ஓடிய சந்தேகநபர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
தப்பி ஓடிய சந்தேகநபருடன் தேடப்பட்டுவந்த மற்றொரு நபரும் இணைந்து சட்டத்தரணி ஊடாக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.
பொலிஸார் பணி இடைநிறுத்தம்
இதேவேளை குறித்த சந்தேகநபர் பொலிஸ் நிலையத்திலிருந்து தப்பி ஓடிய சம்பவத்தை தொடர்ந்து இரு பொலிஸார் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்தனர்.
வழிப்பறி, கொள்ளை, போதை வியாபாரம் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய சந்தேகநபரை கடந்த வியாழக்கிழமை ஹெரோயின் போதைப் பொருளுடன் பொலிஸார் கைது செய்திருந்தனர்.
இந்நிலையில் மறுநாள் வெள்ளிக்கிழமை பொலிஸ் நிலையத்தின் மலசலகூடம் வழியாக தப்பி ஓடிய சந்தேகநபர், மற்றொரு தேடப்படும் நபருடன் சரணடைந்துள்ளார்.