படுகொலைகளை தெரிவு செய்து கண்டிப்பது அந்த நபரின் நாகரீக இயல்புகளை கேள்விக்குட்படுத்துவதுடன் அவர்களின் இரகசிய நிகழ்ச்சி நிரல்களை அம்பலப்படுத்துகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.
கறுப்பு ஜூலையை நினைவுகூர்ந்து கனடா தூதுவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவிற்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இளம்பிக்குகள் கொலை
மேலும் கூறுகையில்,“இலங்கையில் 1983 இல் கொல்லப்பட்ட தமிழர்களை நினைவுகூர்ந்து கனடா தூதுவர் டுவிட்டர் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
1983 ஆம் ஆண்டு ஜூலையின் பின்னர் தமிழர்களால் வடக்கிலிருந்து துரத்தப்பட்ட ஆயிரத்திற்கும் அதிகமான சிங்களவர்கள் தமிழர்களை நாங்கள் நினைவுகூறுகின்றோம்.
கிழக்கு மாகாணத்தில் சிங்கள கர்ப்பிணித்தாய்மார்கள் கொல்லப்பட்டதையோ அநுராதபுரத்தில் 200 யாத்திரீர்கள் கொல்லப்பட்டதையோ அரந்தலாவையில் இளம் பிக்குகள் கொல்லப்பட்டதையோ ஆயுதமேந்தாத சரணடைந்த 600 பொலிஸார் கொல்லப்பட்டதையோ கனடா தூதுவர் கண்டித்ததாக நாங்கள் கேள்விப்படவில்லை.”என தெரிவித்துள்ளார்.