இன்று வானில் தென்படவுள்ள ‘சூப்பர் ப்ளூ மூன்’

0
361

சூப்பர் ப்ளூ மூன் எனும் நிலவு இன்று இரவு வானில் தென்படவுள்ளது. இன்றைய தினத்திற்கு பின்னர் அடுத்த சூப்பர் ப்ளூ மூன் 14 ஆண்டுகளுக்கு பின்னரே தெரியும் என நாசா செய்தி வெளியிட்டுள்ளது.

ஒரு மாதத்தில் இரண்டு முழு நிலவு நாட்கள் வரும்போது, ​​இரண்டாவது முழு நிலவு ப்ளூ மூன் என்று அழைக்கப்படுகிறது. இதனை நாம் சாதாரணமாக கண்களால் பார்க்கலாம். பௌர்ணமி தினமான இன்று நிலவானது வழமையை விட 14 வீதம் பெரிதாகவும் பிரகாசத்துடனும் தென்படும்.